நாகை மாவட்டம் ஜெகதாபட்டினம் செல்வனேந்தல் குப்பத்தைச் சேர்ந்த தமிழக மீனவ இளைஞர் பாண்டியன் சிங்கள இனவெறிக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1983லிருந்து இதுநாள் வரையில் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினராலும் இந்தியப் படையினராலும் அவ்வப்போது சுட்டுப் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது செல்வனேந்தல் பாண்டியனும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்திய அரசு பாராமுகமாக இருந்து சிங்களர்களுக்குத் துணையாகவும், தமிழினத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதில் இந்திய அரசுக்குத் துளியளவும் அக்கறையில்லை என்பது வெளிப்படையான உண்மையேயாகும்.ஆகவே இந்த கொடிய செயலை கண்டிக்கும் வகையில் எழுச்சித்தமிழர் தலைமையில் சென்னையில் 25/1/2011 இன்று காலை 11 மணியளவில் பல்லாயிர கணக்கான விடுதலைச்சிறுத்தைகள் இலங்கை தூதரகத்தை முற்றுகை போராட்டத்திலும்,சாலை மறியலிலும் ஈடுபட்டனர். எழுச்சித்தமிழர் பங்கேற்பதற்கு முன்னதாகவே , காவல்துறையினரால் 500 க்கும் மேற்பட்டவிடுதலைச்சிறுத்தைகள் கைது செய்யபட்டனர்
மேலும் செய்திகள் இங்கே....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment