விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னை உதயம் திரைப்பட அரங்கில் உள்ள சந்திரன் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்கு முன் எழுச்சித் தமிழர் திருமாவளவன் கூறியது. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” திரைப்படம் தலித் சமுதாயத்தினர் மட்டுமல்லாது பிற சமூகத்து மக்களும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாகும். இப்படத்திற்கு தமிழக அரசு 10 இலட்ச ரூபாய் மட்டுமே நிதி வழங்கியுள்ளது. தற்போது ஒரு சில திரையரங்குகளில் மட்டும் ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே திரையரங்கம் அமர்த்தி மக்கள் இலவசமாகப் படத்தைப் பார்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தங்கள் குடும்பத்துடன் “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” இலவசமாகப் பார்ப்பதற்லு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் எழுச்சித்தமிழர் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகள் இங்கே....
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
எங்கு காணினும் பதாதைகள், சிறு சிறு நிகழ்ச்சியாக இருந்தாலும் பெரிய பெரிய விளம்பரங்கள்.
அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்பட விளம்பரங்கள் மிக சொற்ப அளவில் தான் ஒட்டப்பட்டு இருந்தது. அடுத்தநாள் காலையில் பார்த்தல் அத்திரைப்பட விளம்பர சுவரோட்டில் புதிதாத ஒன்றுககும் உதவாத சில திரைப்பட விளம்பரங்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
காது குத்து, நினைவு நாள் மற்றும் தற்பெருமை விளம்பரங்கள் அளவுக்குட அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்பட விளம்பரங்கள் இல்லை.
கலைஞர் 10 இலட்சம் கொடுத்தார் என்பது தான் பெரிய செய்தியாக இருக்கிறது. தலித்து கட்சியில் உள்ளவர்களில் 25% பேர் கூட இத் திரைப்படம் பார்த்து இருக்க வாய்ப்பில்லை.
திரை அரங்கில் குறைவான எண்ணிக்கை உள்ளவர்களை கண்டு கடுங்கோபம் கொண்டிருந்தாலும், அன்று நான் அத்திரை அரங்கில் பார்த்தவர்கள் சமுக அறிவு நிறைந்தவர்களாக இருந்தது மன நிறைவு அளித்தது.
நகர் புறங்களில் இப்படி என்றால் கிராம புறங்களில் இத் திரைப்படம் வந்து இருக்கிறது என்பதை இன்னும் பலர் அறியாமல் இருக்கின்றனர்.
சமுக அறிவும் சமய மாற்றமும் தான் தலித்துகளை இழிவுகளிலிருந்து விடுதலை பெற
வைக்கும். அதற்க்கு அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படமே போதும்.
எல்லா தலித்து அமைப்புகளும் தங்களது உறுப்பினர்கள், அவர்களுடைய உறவினர்கள் அனைவரையும் கண்டிப்பாக அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் பார்த்தே ஆகவேண்டும் என்றலே போதும்.
இலவசம் வேண்டாம்
Post a Comment