சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

விடுதலைச்சிறுத்தைகளுக்கு வருகிற 2011 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதி என்று ஒப்பந்தம் ஏற்பட்டு முதல்வர் முன்னிலையில் எழுச்சித்தமிழர் கையப்பமிட்டார் ,வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது; வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சமத்துவ பெரியார் கலைஞர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் 10 இடங்களில் தனி சின்னத்தில் விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிடும். விடுதலைச்சிறுத்தைகள் தமிழகம், தழுவியளவிலே களப்பணியாற்றுவோம் விடுதலைச்சிறுத்தைகள் இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவோம் என பேசினார்.

Monday, February 28, 2011


அமைப்பாய் திரளுவோம் ! அங்கீகாரம் பெறுவோம் !

அதிகாரம் வெல்வோம்!

எல்லோரும் கூட்டணிக்காகவும் ஸீட் பேரத்துக்காகவும் ஓடிக்கொண்டு இருக்கையில், ஈழத் தாய்க்கு அஞ்சலி செலுத்த ஓடியவன் நான். என் சுயம் இன்னமும் மிச்சம் இருப்பதன் சாட்சிதான் அந்தக் காட்சி!'' தமிழர்களின் அடையாளத் தலைவனான அண்ணன் பிரபாகரனின் தாய், ஆதரிக்க ஆள் இல்லாமல் கிடந்த கோலம் இன்றைக்கும் என்னை நொறுக்குகிறது. அம்மா இறந்துவிட்டார் எனத் தெரிந்ததும் அவருடைய கால்மாட்டில் நின்று கதற வேண்டும் போலிருந்தது. அதனால்தான் அவசரகதியில் இலங்கைக்குப் போய் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியும் அவர்கள் மனம் இரங்கவில்லை! திருப்பி அனுப்பி விட்டார்கள்- மன வேதனையில் திருமா.

Sunday, February 27, 2011




திருமா.இன்.....................

பரளிபுதூர் சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்தும் கடலூர் மாவட்டம், கம்பளி மேடு சுப்பிரமணியன் படுகொலையைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 04.03.2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


திருமா.நெட்..............................................

யார் யாரோ தமிழினத் தலைவனென்றும்.... யார் யாரோ தமிழினப் பாதுகாவலனென்றும்....

Friday, February 25, 2011

யார் யாரோ தமிழினத் தலைவனென்றும்....
யார் யாரோ தமிழினப் பாதுகாவலனென்றும்....
யார் யாரோ தமிழுக்காய் உயிர் கொடுப்பேனென்றும்....
தமிழ் தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முந்நூறு முறை
பெயரளவில் பகட்டாக பதைபதைத்தவர் மத்தியில்
தமிழினம் அழிகையில்
இமயம் வெடிக்க
இதயக் குமுறலில்
தமிழினத்தைக் காப்பாற்ற
இளமையைத் துறந்து
இன்னுயிர் நீக்க
உண்மையில் வெடித்தெழுந்த
எரிமலையே!
எம் எழுச்சித் தமிழரே!! 
வெல்க தமிழர் இறையாண்மையை - உங்கள் தலைமையில்!!!

அரசபிரபாகரன்
மாநில துணை செயலாளர்
பொறியாளர் அணி

ஒரு கட்சியின் கட்டுப்பாட்டை மதிப்பது, அந்த கட்சியின் தலைமை கோட்பாடு மற்றும் கொள்கைகளை மதிப்பது போன்ற மனப்பக்குவத்தை தொண்டர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.தலைவர் தொல்.திருமாவளவன்


பார்வதி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தலைவர் திருமாவளவனுக்கு இலங்கையில் அனுமதி அளிக்காததற்கு நடிகர் சத்யராஜ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.










தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு ரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்ற கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைத் திருப்பிஅனுப்யகண்டித்து, தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில்போராட்டம் நடத்தப்பட்டது எழுச்சித்தமிழர் உள்பட1000ம் பேர் கைது..




thanks for thiruma.in

தியாகி முத்துக் குமார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரின் சிலைத் திறந்து வைத்து எழுச்சித்தமிழரின் வீரவணக்க எழுச்சி உரைகள்

Sunday, February 13, 2011

akaran(vck) muthukumar 2 aam aandu veeravanakka pothukuttam thiruma sp...

akaran(vck) muthukumar 2 aam aandu veeravanakka pothukuttam thiruma sp...

akaran(vck) muthukumar 2 aam aandu veeravanakka pothukuttam thiruma sp...

akaran(vck) muthukumar 2 aam aandu veeravanakka pothukuttam thiruma sp...

akaran(vck) muthukumar 2 aam aandu veeravanakka pothukuttam thiruma sp...

akaran(vck) muthukumar 2 aam aandu veeravanakka pothukuttam thiruma spee...

தமிழ் மக்கள், தமிழ் மண்ணுக்காக போராடி, வாதாடி வரும் இயக்கம் தான் விசிக, கட்சிஅங்கீகாரம்பெறவேண்டும் என்ற வேட்கையோடு நாம் களப் பணியாற்ற வேண்டும்-எழுச்சித் தமிழர்


விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறிக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்து ஒரு நாள் உண்ணாநிலை அறப்போரட்டம்

Sunday, February 6, 2011

திருப்பூர் மாவட்டத்தில் .............................


மேலும் செய்திகள் இங்கே....

முத்துக்குமாரின் கனவை நனவாக்குவது பிரபாகரன் கனவை நனவாக்குவது போன்றது: திருமா

இலங்கையில் போரை நிறத்தக்கோரியும் ஈழத்தமிழர்களை காக்க வலியுறுத்தியும் தீக்குளித்து தன் தாகத்தை வெளிப்படுத்தி தன்னுயிர் நீத்த தியாகி முத்துக்குமாருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கரும்புலி முத்துக்குமாரின் சொந்த ஊரான திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர்.என்ற கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெண்கல சிலை திறக்கப்பட்டது. பின்னர் திருச்செந்தூர் வா.உ.சிதம்பரனார் திடலில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. எழுச்சித்தமிழர் பேசியதாவது :
மேலும் செய்திகள் இங்கே....

சமுக அறிவும் சமய மாற்றமும் தான் தலித்துகளை இழிவுகளிலிருந்து விடுதலை பெற வைக்கும். அதற்க்கு அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படமே போதும். எல்லா தலித்து அமைப்புகளும் தங்களது உறுப்பினர்கள், அவர்களுடைய உறவினர்கள் அனைவரையும் கண்டிப்பாக அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் பார்த்தே ஆகவேண்டும் -ஏழு.கலைக்கோவன்

Tuesday, February 1, 2011

திரை அரங்கில் குறைவான எண்ணிக்கை உள்ளவர்களை கண்டு கடுங்கோபம் கொண்டிருந்தாலும், அன்று நான் அத்திரை அரங்கில் பார்த்தவர்கள் சமுக அறிவு நிறைந்தவர்களாக இருந்தது மன நிறைவு அளித்தது.

வீர தமிழா முத்து குமாரா உமக்கு எங்கள் வீரவணக்கம்,விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்காக அல்ல என்றும் தமிழினம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கொள்கைக்காக பாடுபடும் கட்சி என்று திருச்செந்தூர் வீரவணக்கப் பொதுகூட்டத்தில் தொல்.திருமாவளவன்




முதலில் தம்பி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் ,உண்மையான தமிழ் உணர்வாளர் யார் ? என்று தம்பி முத்துக்குமாருக்கு தெரிந்து இருக்கிறது அதனால் தான் சாகும் தருவாயில் கூட நான் இறந்த செய்தியை அண்ணன் பிரபாகரனுக்கும், அண்ணன் திருமாவளவனுக்கும் உடனே தெரியப்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு இறந்து போனான்.

தமிழகத்து தம்பி முத்துகுமாருக்கு மேதகு.பிரபாகரனே ஈழத்தில்வீரவணக்கம் செலுத்தினர் அந்தளவிற்கு முத்துகுமார் ஈழத்தமிழர்களுக்காக செய்துதிருக்கிற தியாகம் மகத்தானது. ஆனால் இங்குள்ள போலி தமிழ் தேசியவாதிகளும் ,சாதிய தமிழ் தேசியவாதிகளும் ,திருமாவளவனின் மீது சாதி முத்திரையை குத்த முயற்சிக்கிறார்கள். திருமாவளவன் கட்சியை தொடங்கும் போதே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்று தான் பெயர் சுட்டினேன், சாதி ஒழிப்பை கொள்கையாக பிரகடனப்படுத்தினேன். தமிழகத்தில் மற்ற எல்லா தலைவர்களும் சாதி சங்கங்களை ஆரம்பித்து அதன்பின்னர் ஒட்டுக்காக தான் கட்சி பெயரை மாற்றி இருக்கிறார்கள் .எந்த ஒரு கட்சியும் சாதி ஒழிப்பை கொள்கையாக வைத்தது இல்லை திருமாவளவனை தவிர, அதை நான் மார்தட்டி சொல்லுவேன், திருமாவளவனின் மீது கல் எறிபவர்கள், அவதூறு பரப்புகிறவர்கள் ஒரு நாள் திருமாவளவன் உண்மையான தமிழ் தேசியவாதி என்று அவனே திருமாவளவனின் மீது மாலை அணிவிப்பான் அது வரை விடுதலைச்சிறுத்தைகள் பொறுமை காக்கவேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ,பொதுச்செயலாளர் கலைகோட்டுதயம் வன்னிஅரசு, கரும்புலி முத்துக்குமார் பாசறையின் முதன்மைச்செயலாளர் சங்கத்தமிழன், முகமது யூசப், ஆற்றலரசு, பாவரசு, கலியமுதன், கலைவேந்தன், உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளுமானோர் கலந்துகொண்டனர்..

பாலிமர் தொலைக்காட்சியில் எழுச்சித்தமிழரின் நெகிழ்ச்சியான பதில்கள்..




மேலும் செய்திகள் இங்கே....

பிரபாகரன் பக்கத்தில் திருமாவை பார்க்கும் நாள் விரைவில் வரும் - கவிஞர்.அறிவுமதி

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP