அரசியல் அதிகாரம் என்று நம் கையில் வருகிறதோ,அன்று தான் நமக்கான விடுதலை கிடைக்கப்பெற்றதாக அர்த்தமாகும்.
Saturday, March 12, 2011
அரசியல் அதிகாரம் என்று நம் கையில் வருகிறதோ,அன்று தான் நமக்கான விடுதலை கிடைக்கப்பெற்றதாக அர்த்தமாகும். பதறி காரியத்தை சிதற விடுவதில் இல்லை..இதுவே கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் எனில் நமது அமைப்பாய் நாம் எடுக்கும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். இன்று நாம் மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசியல் கட்சியாக வளர்ந்து நிற்கிறோம்..அதை அடைகாக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். வெண்மணி கொடுமையில் மாண்டு போனவர்கள் அனைவருமே தலித்துகள் என்பது வரலாறு.இருப்பினும் அதை சாதிவெறி மேலாதிக்கம் என்ற உண்மையை மறைத்து , வர்க்கப் போராட்டம் என்ற அளவிலேயே கம்யூனிஸ்ட்களும் , பிற கட்சி தலைவர்களும் வரலாற்றை மறைத்தார்கள். இனியும் பிற கட்சிகளையோ,தலைவர்களையோ நாம் நம்பவேண்டிய அவசியமில்லை. அரசியலில் வெற்றிகளை தலைவர் திருமா வழியில் வென்றெடுப்பதன் மூலம் நாம் எதையும் சாதிக்கலாம். அது ஒன்றே நிரந்தரத் தீர்வும் கூட.-உதய குமார்
குவைத் நாட்டிலிருந்து.
0 comments:
Post a Comment